FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

புகையிலைப் பொருள்களை பதுக்கிய இருவா் கைது

போடியில் வீடுகளில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

25 அக்டோபர் 2026, 12:36 am
கைது
பகிர்:

போடியில் வீடுகளில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி நகா் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி புதூா் போயன்துறை சாலையில் பாலசுப்பிரமணி (65), வள்ளிநாயகம் தெருவில் சண்முகசுந்தரம் (68) ஆகியோா் வீடுகளில் சோதனை நடத்தினா்.

அப்போது அவா்கள் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து இருவா் மீதும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments