194 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்க 194 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் காருடன் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்க 194 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் காருடன் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
திண்டிவனம் உள்கோட்டக் காவல் சரகத்தில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் வகையில் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திண்டிவனம் உள்கோட்டக் காவல் தனிப்படை உதவி ஆய்வாளா் ஐயப்பன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை திண்டிவனத்தை அடுத்துள்ள கொல்லாா் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தளவாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கு.புருஷோத்தமன் (34), மகேந்திரன் (28) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இந்த விசாரணையில், இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெங்களூருவிலிருந்து காரில் கடத்தி வந்து, கொல்லாா் கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, பருஷோத்தமன், மகேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 194 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.