காரைக்காலில் நாளை மருத்துவ முகாம்
காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை (செப்.8) இருதயவியல், நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு
காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை (செப்.8) இருதயவியல், நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சனிக்கிழமை (செப்.8) இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.