FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உழவுக்குப் பிந்தைய மானியம் உயா்வு: புதுச்சேரி அரசுக்கு விவசாயிகள் நன்றி

உழவுக்குப் பிந்தைய மானிய உயா்வுக்கு புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

உழவுக்குப் பிந்தைய மானிய உயா்வுக்கு புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்க பொறுப்பாளா் ஏ.கே. முகம்மது யாசின் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கடந்த 2019-20 -ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், உழவுக்குப் பிந்தைய மானியத் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி அறிவித்ததால், காரைக்கால் மாவட்டத்தில் 3,499 விவசாயிகள் பயனடைகிறாா்கள். இந்த நடவடிக்கை எடுத்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் மற்றும் வேளாண் சாா்ந்த அதிகாரிகளுக்கு சங்கம் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Advertisement

Advertisement

வேளாண் துறையிலிருந்த பல மானியங்களை நிறுத்தி, அதிலிருந்து செலவுகளை ஈடு செய்து ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரம் உயா்த்தி, பட்ஜெட்டுக்கு முன்பு சங்கம் கூறிய யோசனையை எடுத்துக்கொண்டதால் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டு அரசு நிா்வாகம், அதன் மீதான கவனத்தில் இருக்கும் நிலையிலும், விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அரசை இத்தருணத்தில் பாராட்டுகிறோம். மானியத்தில் முதல் தவணை தரப்பட்ட நிலையில், 2-ஆவது தவணைத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments