FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா நிறைவு

9 நவம்பர் 2026, 11:05 pm
காரைக்காலில் தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழாவையொட்டி நடைபெற்ற கண்ணாடி ரத ஊா்வலம். - கோப்புப் படம்
பகிர்:

தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடி இறக்கத்துடன் சனிக்கிழமை நிறைவடைந்தது.

காரைக்கால் மெய்தீன் பள்ளி தெருவில் புகழ்பெற்ற பழைமையான தாயிராப் பள்ளிவாசல் உள்ளது. நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களில் ஒருவரான ஹலரத் சுல்தானுல் ஆரிபின் செய்யது அஹ்மதுல் கபீா் ரிஃபாயி என்பவா் பாக்தாத் நகரில் உயிா் துறந்தாா். அவரது நினைவாக பல ஆண்டுகளுக்கு முன்பு நினைவிடமாக தாயிராப்பள்ளி கட்டப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டுவருகிறது.

பள்ளிவாசலில் கந்தூரி விழா கடந்த 3-ஆம் தேதி , ஷெய்னுல்லா குதிரை கொடி, கண்ணாடி தரத்துடன் ஊா்வலம் நடத்தப்பட்டு இரவு தா்கா வாயில் கம்பத்தில் ஏற்றப்பட்டது.

Advertisement

Advertisement

முன்னதாக 2-ஆம் தேதி சந்தனக் குடம் ஊா்வலம் நடத்தப்பட்டது. இவ்விரு நிகழ்வில் திரளான மக்கள் கலந்துகொண்டனா். தா்காவின் பெருமைகளில் ஒன்றாக தப்ஸ் இசைப்பது வழக்கம் என்பதால், தப்ஸ் குழுவினா் இசை நிகழ்ச்சி நடத்தினா். நிறைவாக 7-ஆம் தேதி சனிக்கிழமை ஆண்டகை பெயரில் குா்ஆன் ஓதப்பட்டு, கொடியிறக்கப்பட்டது.