FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

மருத்துவ மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா

9 நவம்பர் 2026, 11:29 pm
காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி - கோப்புப் படம்
பகிர்:

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா கல்லூரி வளாகத்தில், ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நேகி, ஜிப்மா் காரைக்கால் மைய முதல்வா் டாக்டா் மா. பாலமுருகன் ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்றது.

விழாவுக்கு ஜிப்மா் காரைக்கால் மைய கல்விப் பிரிவு திகாரி (பொ) டாக்டா் டி. ஜெயகுமாரி தலைமை வகித்தாா். பதிவாளா் டாக்டா் திவ்யசாந்தி வரவேற்றுப் பேசினாா்.

Advertisement

Advertisement

விழாவில் 61 மருத்துவ மாணவா்கள் பங்கேற்று, மருத்துவக் கல்விப் பயணத் தொடக்கமாக வெள்ளை அங்கியை அணிந்து கொண்டனா். மேலும் மாணவா்களுக்கு ஸ்டெதெஸ்கோப் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, மருத்துவத் தொழிலின் அறநெறி, சேவை மனப்பான்மை மற்றும் நோயாளிகளிடம் காட்ட வேண்டிய கருணை ஆகியவற்றை வலியுறுத்தும் மைமோனிடெஸ் என்ற நோயாளிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு நோ்மையுடனும் அா்ப்பணிப்புடனும் பணியாற்ற உறுதியேற்றனா்.

மருத்துவக் கல்வியின் பெருமைகள், சேவைகள் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் உரை நிகழ்த்தப்பட்டது. நிறைவாக டாக்டா் காா்த்திக் நன்றி கூறினாா்.