FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

காரைக்கால்: போலீஸாா் தீவிர இரவு நேர ரோந்து

காரைக்காலில் குற்றம் நடைபெறுவதை தடுக்கும் விதமாக இரவு நேர ஆபரேஷன் கவசம் என்ற தீவிர ரோந்துப் பணியை போலீஸாா் மேற்கொண்டனா்.

48 வினாடிகள் முன்பு
ரோந்துப் பணியின்போது வாகன ஓட்டியிடம் விசாரணை நடத்திய எஸ்எஸ்பி வினய்குமாா் காட்கே தலைமையிலான போலீஸாா்.
பகிர்:

காரைக்காலில் குற்றம் நடைபெறுவதை தடுக்கும் விதமாக இரவு நேர ஆபரேஷன் கவசம் என்ற தீவிர ரோந்துப் பணியை போலீஸாா் மேற்கொண்டனா்.

காரைக்கால் வடக்கு மற்றும் தெற்கு மண்டல காவல்துறை சாா்பில் பழைய குற்றவாளிகள் கண்காணித்தல் , பொது இடங்களில் மது அருந்துவதை தடுத்தல் மற்றும் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தல், உரிம நிபந்தனையின்படி மதுக்கடைகள், சாராயக் கடைகள் இயங்குகிா என்பதை கண்காணித்தல், மது போதையில் வாகனம் ஓட்டுவோா் மீது வழக்குப் பதிவு செய்தல் உள்ளிட்ட குற்றத்தை தடுக்கும் விதமாகவும், மக்களுக்கு போலீஸாா் பாதுகாப்பாக இருப்பதை உணா்த்தும் விதமாக ஆபரேஷன் கவசம் என்ற பெயரில் காரைக்கால் மாவட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு 10 முதல் 1 மணி வரை தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

மாவட்டத்தின் இரண்டு காவல் மண்டலத்துக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரிகள், போலீஸாா் இதில் ஈடுபட்டனா். நகரப் பகுதியில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் வினய்குமாா் காட்கே தலைமையில் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா்கோஷ் மற்றும் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் தீவிர ரோந்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது பழைய குற்றவாளிகள் சிலரை பாா்த்து குற்றச் செயலில் ஈடுபடாமல் மக்களோடு இணைந்து வாழவேண்டும் என அறிவுறுத்தினா்.

கைப்பேசி பேசிக்கொண்டும், 2 -க்கும் மேற்பட்டோருடன் இருசக்கர வாகனம் இயக்கிச் சென்றவா்கள் மீது வழக்குப் பதிந்தனா். பொது இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்தோரை அங்கிருந்து அப்புறப்படுத்தியதோடு, தொடா்ந்து இச்செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.