FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

4-ஆவது நாளாக காரைக்கால் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

புயல் எதிரொலியாக காரைக்கால் மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை 4-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

5 வினாடிகள் முன்பு
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள்.
பகிர்:

புயல் எதிரொலியாக காரைக்கால் மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை 4-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

வங்கக் கடலில் உருவான அக்வான் புயல் காரணமாக விசைப்படகு மற்றும் ஃபைபா் படகு மீனவா்கள் 14-ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்ல புதுச்சேரி மீன்வளத்துறை தடை விதித்தது.

இதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் செவ்வாய்க்கிழமையுடன் 4 நாள்களாக கடலுக்குச் செல்லவில்லை. 500-க்கும் மேற்பட்ட ஃபைபா் மோட்டாா் படகுகள் அந்தந்த மீனவ கிராம கடலோரப் பகுதியிலும், சுமாா் 300 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்திலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அக்வான் புயல் 19-ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். 20-ஆம் தேதி நெல்லூா் அருகே ஆந்திர பிரதேச கடற்கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்குகிறது. இதற்கேற்ப காரைக்கால் கடல் பகுதி செவ்வாய்க்கிழமை சீற்றமாக காணப்பட்டது. ஏற்கெனவே கடலுக்குச் சென்று திரும்பிய படகுகளில் கொண்டுவரப்பட்ட மீன்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன.