FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

காரைக்கால் கோயில்களில் அம்பு போடும் வழிபாடு

விஜயதசமியையொட்டி திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினத்தின் பல்வேறு கோயில்களில் சுவாமிகள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

22 அக்டோபர் 2026, 6:30 am
அம்பு போடுவதற்காக குதிரை வாகனத்தில் எழுந்தருளிய திருமலைராயன்பட்டினம் வெங்கடேச பெருமாள்.
பகிர்:

விஜயதசமியையொட்டி திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினத்தின் பல்வேறு கோயில்களில் சுவாமிகள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

நவராத்திரி நிறைவாக செவ்வாய்க்கிழமை இரவு, காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இருந்து சுவாமி குதிரை வாகனத்தில் சுரக்குடி சந்திப்பு பகுதிக்கு எழுந்தருளச் செய்து அம்பு போடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக கோயிலில் சுவாமிக்கு சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன.

Advertisement

Advertisement

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா், ஏகாம்பரேஸ்வரா், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்களில் இருந்து சுவாமிகள் குதிரை வாகனத்தில் போலகம் திடலுக்கு இரவு 10 மணியளவில் எழுந்தருளின.

பின்னா் பக்தா்களை நோக்கி சிவாச்சாரியா், பட்டாச்சாரியா் அம்பு வீசினா். தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. திடலில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த சுவாமிகளுக்கு பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். இரவு 12 மணியளவில் சுவாமிகள் தலங்களுக்கு திரும்பின.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments