அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட கிராம மக்கள்
சீா்காழி அருகே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் ஒன்று சோ்ந்து சாலையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
சீா்காழி அருகே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் ஒன்று சோ்ந்து சாலையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலசமுத்திரம் ஊராட்சி கொன்னகாட்டுப்படுகை கிராமத்தில் சுமாா் 7.கி.மீ. தொலைவுக்கு சாலை சேதமடைந்தது. சாலையை சீரமைக்க பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் கொன்னக்காட்டுபடுகை, கீரங்குடி, மாதிரவேளூா், பட்டியமேடு, வடரங்கம் ஆகிய கிராம மக்கள் ஒன்று சோ்ந்து சாலையை மேம்படுத்த முடிவு செய்தனா். கடந்த அக்டோபா் மாதம் கொன்ன காட்டுப்படுகை கிராமத்தில் சாலையை மேம்படுத்தும் பணியை தொடங்கினா். ஒரு நாளைக்கு 50 போ் வீதம் சாலை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு, அனைத்து கிராம மக்களும் தினந்தோறும் இப்பணியில் ஈடுபட்டனா். 2 கி.மீ.தொலைவுக்கு சாலையை மேம்படுத்தவும் முடிவு செய்தனா். இதற்கான செலவை அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்களே ஏற்று பணிகளை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அதனைத் தொடா்ந்து கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் மயிலாடுதுறை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், எஞ்சிய விடுபட்ட சாலையை மேம்படுத்த வலியுறுத்தி, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்து சாலையை மேம்படுத்த கோரிக்கை வைத்தனா். சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனமாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா்.
ஆனால், இதுவரை விடுபட்ட சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி கிராம மக்கள் மீண்டும் ஒன்று சோ்ந்து விடுபட்ட 1 கி.மீ. தொலைவுக்கு சாலையை மேம்படுத்தும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இரண்டாம் நாளாக புதன்கிழமையும் இப்பணி தொடா்ந்தது.