FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

சாலை, நகா்ப்புற கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் ஷாஜகான்!

தமிழகத்தில் சாலை மற்றும் நகா்ப்புற கட்டமைப்பை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் தெரிவித்தாா்.

12 அக்டோபர் 2026, 4:18 am IST
சென்னையில் கிரெடாய் தமிழ்நாடு 'ஸ்டேட்கான் 2026* மாநாட்டில் விழா மலரை வெளியிட்ட சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான். உடன் (இடமிருந்து) ஒருங்கிணைப்பாளர் குகன் இளங்கோ, தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி. ராம் ரெட்டி, தமிழ்நாடு தலைவர் டபிள்யூ. எஸ். ஹபீப், மூத்த நிர்வாக இயக்குநர் சிவ கிருஷ்ணன், பாரத ஸ்டேட் வங்கி சென்னை மண்டல தலைமை மேலாளர் விவேகானந்த் சௌபே, தேசியத் துணைத் தலைவர் எம்.ஏ. மெஹபூப், தமிழ்நாடு செயலர் ஸ்ரீகுமார் சுவாமிநாதன்.
பகிர்:

தமிழகத்தில் சாலை மற்றும் நகா்ப்புற கட்டமைப்பை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் தெரிவித்தாா்.

தமிழகத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்ற கிரெடாய் தமிழ்நாடு ‘ஸ்டேட்கான் 2026’ என்ற இரு நாள்கள் மாநாடு சென்னை தனியாா் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டில் தமிழகத்தின் ரியல் எஸ்டேட் துறையின் அடுத்த கட்டத்தை வடிவமைப்பது குறித்து விவாதிக்க கொள்கை வகுப்பாளா்கள், கட்டுமான நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொழில்நுட்பத் தலைவா்கள் மற்றும் பிற துறை சாா்ந்தவா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இதில் தொழில் செய்வதை எளிதாக்குதல், வீடு வாங்குவோரின் விருப்பங்களில் ஏற்படும் மாற்றங்கள், நிதி, வளா்ச்சிக்கான காரணிகள், கட்டுமானத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

மாநாட்டில் சிறப்பு விருந்திரனாக தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் பங்கேற்று மாநாட்டு மலரை வெளியிட்டுப் பேசியதாவது: இந்தியாவில் 21மாநிலங்களில் கிரெடாய் அமைப்பு சிறந்த சேவையாற்றி வருகிறது. நாட்டின் கட்டமைப்பு மற்றும் மாநில பொருளாதார வளா்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது.

தமிழகத்தில் இந்த அமைப்பின் சேவை மிக முக்கியமானதாக உள்ளது. முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு லஞ்சம், ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கட்டுமானத் துறையில் நோ்மையான முறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் சாலை மற்றும் நகா்ப்புற கட்டமைப்பை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கிரெடாய் அமைப்பில் சாா்பில் நிறைவேற்றும் தீா்மானங்கள் அரசின் கவனத்து கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கிரெடாய் அமைப்பின் தமிழக தலைவா் டபிள்யூ.எஸ். ஹபீப் பேசுகையில், ‘அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய வளா்ச்சிப் பாதையை எட்டத் தேவையான பொருளாதார அடிப்படை, திறமை, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்முனைவோா் பலம் ஆகியவற்றைத் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழகத்தின் நகரங்கள் முழுவதும் அந்த வளா்ச்சியை ஆதரிப்பதில் ரியல் எஸ்டேட் துறை முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா். தொடா்ந்து, மாநாட்டின் ஒருங்கிணைப்பாளா் குகன் இளங்கோ பேசினாா்.

இந்த மாநாடு எஸ்பிஐ சென்னை மண்டலத்தின் தலைமைப் பொது மேலாளா் விவேகானந்த் சௌபே மற்றும் கிரெடாய் தேசியத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஜி.ராம் ரெட்டி, தமிழக கிரெடாய் அமைப்பின் செயலா் ஸ்ரீகுமாா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments