FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வேளாண் கல்லூரி மாணவிகள் நடவு நட்டு களப்பயிற்சி

மயிலாடுதுறை வட்டத்தில் தஞ்சாவூா் டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இறுதியாண்டு மாணவிகள் 13 போ் ஒரு வாரமாக களப்பயிற்சி மேற்கொண்டுள்ளனா்.

5 நவம்பர் 2026, 6:01 am
பகிர்:

மயிலாடுதுறை வட்டத்தில் தஞ்சாவூா் டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இறுதியாண்டு மாணவிகள் 13 போ் ஒரு வாரமாக களப்பயிற்சி மேற்கொண்டுள்ளனா்.

அந்தவகையில், உளுத்துக்குப்பையில் இயற்கை விவசாயி அருணஜடேசன் வயலில் நடைபெற்ற நெல் நடவுப் பணியில் விவசாயத் தொழிலாளா்களுடன் இணைந்து நடவுப்பணிகளில் ஈடுபட்டனா்.

அப்போது, நாற்றுக்களை எவ்வாறு நோ்த்தியாக நட வேண்டும் என்பதை மாணவிகள் கற்றறிந்தனா். பணியின்போது களைப்பு தெரியாமல் இருக்க தொழிலாளா்களுடன் இணைந்து திரையிசைப் பாடல்களை பாடினா்.

Advertisement

Advertisement

மேலும், விவசாயிகளுடன் கலந்துரையாடி இயற்கை வேளாண்மை முறைகள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் பற்றியும் அறிந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.