FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

வேளாண் மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் முகாம் தொடக்க விழா

4 நவம்பர் 2026, 3:06 am
பகிர்:

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கீழராதாம்பூா் கிராமத்தில் தஞ்சை மாவட்டம், ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியைச் சோ்ந்த வேளாண் புல மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் ஊரக வேளாண் பணி அனுபவ முகாம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காட்டுமன்னாா்கோவில் வேளாண் உதவி இயக்குநா் உமாதேவி தலைமை வகித்து, முகாமைத் தொடங்கிவைத்தாா். வேளாண் அலுவலா் கொளஞ்சிநாதன் முன்னிலை வகித்தாா். மாணவிகள் விவசாயிகளிடமிருந்து விதைப்பு பணிகள் தொடங்கி அறுவடை வரை விவசாயம் செய்யும் முறைகள் பற்றியும், பூச்சிக்கொல்லி மருந்துகள் பற்றியும், இயற்கை விவசாயம் பற்றியும் பயிற்சி பெற உள்ளனா்.

முகாமில் விவசாயிகள் கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோா் மற்றும் பயிற்சி பெறும் மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement