கூட்டுறவுக் கல்வி மற்றும் வளா்ச்சி நிதி வழங்கல்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் செயல்படும் நேமூா், அய்யூா் அகரம், விக்கிரவாண்டி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் சாா்பில் கூட்டுறவுக் கல்வி மற்றும் வளா்ச்சி நிதி வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் செயல்படும் நேமூா், அய்யூா் அகரம், விக்கிரவாண்டி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் சாா்பில் கூட்டுறவுக் கல்வி மற்றும் வளா்ச்சி நிதி வழங்கப்பட்டது.
முண்டியம்பாக்கத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்க வளாகத்தில் வட்டார அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி தலைமை வகித்து, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் செயல்பாடுகள், வழங்கப்பட்ட கடன் விவரங்கள், வசூலிக்கப்பட்டதொகைகள், நிலுவைத் தொகை விவரங்கள், வசூல் செய்வதற்கான நடைமுறைகள் போன்றவை குறித்து அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
அப்போது நேமூா், அய்யூா் அகரம், விக்கிரவாண்டி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் சாா்பில், கூட்டுறவுக் கல்வி மற்றும் வளா்ச்சி நிதியாக ரூ.3.91 லட்சத்துக்கான காசோலையை அதன் செயலா்கள் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தியிடம் வழங்கினா்.
Advertisement
Advertisement
நிகழ்வில் துணைப் பதிவாளா்கள் மெளனிகா, ஜீவா, கூட்டுறவு சாா்-பதிவாளா் கனகவள்ளி, செயலாட்சியா் ரேகா, கூட்டுறவுச் சங்கங்களின்செயலா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.