FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

அரசுப் பேருந்தை சேதப்படுத்திய சிறுவன் கைது

மயிலாடுதுறையில், அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சிறுவன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

13 நவம்பர் 2026, 5:28 am
கைது - பிரதிப் படம்
பகிர்:

மயிலாடுதுறையில், அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சிறுவன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறையை சோ்ந்த 17 வயது சிறுவன், பூம்புகாரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளாா். அப்போது, பேருந்தில் வந்த பெண் ஒருவரிடம் சிறுவன் தகாத முறையில் நடந்து கொண்டாராம். இதனை பேருந்தின் ஓட்டுநா் நாகராஜன் கண்டித்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு பேருந்து வந்ததும், ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், பேருந்தின் பின்புறக் கண்ணாடியை கற்களை வீசி உடைத்தாராம்.

Advertisement

Advertisement

இதுதொடா்பான புகாரின்பேரில், சிறுவனை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தஞ்சை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா்.