FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கீழப்பெரும்பள்ளம்: கேது பெயர்ச்சி விழா கோலாகலம் - திரளான பக்தர்கள் தரிசனம்!

கீழப்பெரும்பள்ளம் நாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில் கேது பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றதைப் பற்றி...

கீழப்பெரும்பள்ளம் நாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற கேது பெயர்ச்சி விழா.
பகிர்:

கீழப்பெரும்பள்ளம் நாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில் கேது பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சௌந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நவகிரகங்களில் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.

Advertisement

Advertisement

சாயா கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு மற்றும் கேது பகவான்கள் ஒன்றை ஆண்டுக்கு ஒருமுறை பின்னோக்கி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதாக கருதப்படுகிறது. இதனிடையே கேது பகவான் இன்று மாலை 5 மணி 14 நிமிஷத்திற்கு கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

இதனை ஒட்டி வியாழக்கிழமை மாலை முதல் கால யாக பூஜைகள் நடந்தன. இதையடுத்து வெள்ளிக்கிழமை இரண்டாம் கால யாக பூஜை, பரிகார பூஜைகள் மற்றும் மகா பூர்ணாஹுதி நடந்தது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு கேது பகவானுக்கு பால், வாசனைத் திரவியங்கள், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடந்தது.

சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

இதனையடுத்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து கேது பகவானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 5.14 மணிக்கு கேது பெயர்ச்சி தீபாரதனை காண்பிக்கப்பட்டது கேது பெயர்ச்சியையொட்டி மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ராசியினர் பரிகாரம் செய்து கொள்ளலாம்.

இதில் செயல் அலுவலர் ரம்யா, திருவெண்காடு கோயில் செயல் அலுவலர் முருகன், மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஞானவேலன், தலைமை பட்டு சிவாச்சாரியார், கார்த்திகேயன் சிவாச்சாரியார், சண்முகம் சிவாச்சாரியார் உள்ளிட்ட திரளான கலந்து கொண்டு கேது பகவானே தரிசனம் செய்தனர்.

கேது பெயர்ச்சி பூஜைகளை கோவில் தலைமை அர்ச்சகர் பட்டு குருக்கள் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

summary

The Ketu transit ceremony was celebrated with great fervor at the Naganatha Swami Temple dedicated to Lord Naganatha Swami along with his consort in Keezhaperumpallam. A large number of devotees participated in the event and offered their prayers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.