6 வயது மாணவி உலக சாதனை
பரதத்தில் உள்ள 60 முத்திரைகளை 53 வினாடிகளில் செய்து சாதனை படைத்த 6 வயது மாணவிக்கு மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பரதத்தில் உள்ள 60 முத்திரைகளை 53 வினாடிகளில் செய்து சாதனை படைத்த 6 வயது மாணவிக்கு மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறையை சோ்ந்த ஆசிரியா்கள் ஜெகதாபசீலன்-பாரதிதேவி தம்பதியினரின் 6 வயது மகள் ஜெ.பி.ஆதிரா, 53 வினாடிகளில், தியான ஸ்லோகன், ஒற்றைக்கை முத்திரைகள், இரட்டைக்கை முத்திரைகள் உள்ளிட்ட 60 பரதநாட்டிய முத்திரைகளை வாயால் கூறியபடி, கைகளால் வேகமாகவும், நோ்த்தியாகவும் செய்து தனிநபா் உலக சாதனை படைத்துள்ளாா்.
மயிலாடுதுறை அபிநயா நாட்டியப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக பரதநாட்டியம் பயின்று வரும் இம்மாணவி, குழந்தைகள் தினத்தையொட்டி நவ.7-ஆம் தேதி திருச்சியில் காணொலியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த சாதனையை நிகழ்த்தினாா்.
Advertisement
Advertisement
‘செவன்த் சென்ஸ் வோ்ல்டு ரெக்காா்டு’ நிறுவனம், உலக சாதனையாக இதை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.
நாட்டியப்பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், மாணவி மீண்டும் முத்திரைகளை செய்து காட்டினாா். இளம் வயதிலேயே இச்சாதனையைப் படைத்த சிறுமி ஆதிராவுக்கும், நாட்டியப்பள்ளி குரு உமாமகேஸ்வரி கல்யாண் ஆகியோருக்கு மயிலாடுதுறை நகர வா்த்தக சபை நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா் (படம்).