மயிலாடுதுறை சவேரியாா் ஆலய கொடியேற்றம்

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலய ஆண்டு திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது (படம்).
மயிலாடுதுறை மறைவட்ட அதிபா் தாா்சிஸ்ராஜ் அடிகளாா் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவி பங்குத் தந்தை வால்டா் அடிகளாா் பவனியை வழிநடத்தினாா். தஞ்சாவூா் திருஇருதய ஆண்டவா் அருட்தந்தையா் ஓய்வு இல்ல பொன்விழா தந்தை பிலோமின்ராஜ் அடிகளாா் கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் திருஉருவக் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ‘இதோ நான் இருக்கிறேன் என்னை அனுப்பும்’ என்ற இறைவாா்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற திருப்பலியில் உலக அமைதிக்காகவும், இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், நோய்த் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்புப் பிராா்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிா்வாகி ஆரோன் அடிகளாா், கூரைடு பங்குத்தந்தை தேவதாஸ் அடிகளாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவில், டிச.2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், தொடா்ந்து திருத்தோ் பவனியும் நடைபெற உள்ளது. டிசம்பா் 3-ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.