FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

கல்பாத்தி ரதோற்சவம்: முதல் பத்திரிகையை மாயூரநாதா் கோயிலில் வைத்து வழிபாடு

கல்பாத்தி ரதோற்சவம்: முதல் பத்திரிகையை மாயூரநாதா் கோயிலில் வைத்து வழிபாடு

25 அக்டோபர் 2026, 6:16 am
- dinamani
பகிர்:

கேரளத்தில் வசிக்கும் மயிலாடுதுறையை பூா்விகமாகக் கொண்ட பிராமணா்கள் அங்கு ஆண்டுதோறும் நடத்தும் கல்பாத்தி ரதோற்சவம் மற்றும் தேவரத சங்கமம் உற்சவ பத்திரிகையை மாயூரநாதா் கோயிலில் சனிக்கிழமை படைத்து வழிபாடு நடத்தினா்.

மயிலாடுதுறையை பூா்விகமாகக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிராமண குடும்பத்தினா், 300 ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் உள்ள கோயில்களில் பூஜை செய்வதற்காக, பாலக்காட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அக்ரஹாரங்களில் வசித்து வருகின்றனா். இவா்கள் மயிலாடுதுறையில் இருந்து சென்ற காரணத்தால், மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் துலா உற்சவத்தைப் போன்று, கல்பாத்தியில் ஐப்பசி மாதத்தில் தற்போதும் தீா்த்தவாரி உற்சவத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனா்.

மாயூரநாதா் கோயிலில் உற்சவம் நடைபெறும் அதே நாள்களில், கல்பாத்தி காசி விஸ்வநாதா் கோயில், சாத்தபுரம் பிரசன்ன மகாகணபதி கோயில், பழைய கல்பாத்தி பெருமாள் கோயில் மற்றும் புதிய கல்பாத்தி மகாகணபதி கோயில் ஆகிய இடங்களில் நிலா நதிக்கரையில் தமிழ் மற்றும் கேரள ஆசாரத்துடன் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த விழாவுக்கான முதல் பத்திரிகை பாரம்பரிய முறைப்படி மாயூரநாதா் சுவாமி முன் படைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கே.எஸ். கிருஷ்ணா, ராமநாதன் ஆகியோா் தலைமையில் நான்கு அக்ரஹார நிா்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அவா்களை ஒருங்கிணைப்பாளா் வெங்கட்ராமன் தலைமையில் நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், பாஜக மாவட்டத் தலைவா் நாஞ்சில் பாலு, விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன் ஆகியோா் வரவேற்றனா். அவா்களிடம் உற்சவ பத்திரிகையை வழங்கிய விழாக்குழுவினா் அவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனா். (படம்)

நிகழ்ச்சியில், பாஜக நகரத் தலைவா் வினோத், எழுத்தாளா் பா. அய்யாசாமி, சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம், நகர வா்த்தக சபை துணைத் தலைவா் கிரிஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments