வேதாரண்யத்தில் 12}வது நாளாக விவசாயிகள் போராட்டம்
வேதாரண்யத்தில் 2013-14-ம் ஆண்டில் ஏற்பட்ட சம்பா நெல் சாகுபடி பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் முழுமையான காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் மேற்கொண்டு வரும் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை 12-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.

வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த காத்திருப்பு போராட்டத்தை வேதாரண்யம் வட்டார விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 3-ம் தேதி தொடங்கினர். 11-வது நாளான ஞாயிற்றுக்கிழமை, தமிழ்த்தேச பொதுவுடமை கட்சியின் மாநிலத் தலைவர் பெ. மணியரசன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.