FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் லாபம் 53% உயர்வு!

வட்டி வருமானத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக, செப்டம்பர் 2026 தேதியுடன் முடிவடைந்த 2வது காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 53% உயர்ந்துள்ளது.

24 அக்டோபர் 2026, 6:02 pm
ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
பகிர்:

புதுதில்லி: வட்டி வருமானத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து, 2026 செப்டம்பர் உடன் முடிவடைந்த 2வது காலாண்டில், ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் நிகர லாபம் 53% உயர்ந்து ரூ. 858 கோடியாக இருப்பதாக வங்கி இன்று அறிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் வங்கி ரூ. 561 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. கடந்த ஆண்டு, நிறுவனத்தின் மொத்த வருமானம் இதே காலகட்டத்தில் ரூ. 5,224 கோடியாக இருந்தது. மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் இது ரூ. 6,382 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் 2வது காலாண்டில் ரூ.4,511 கோடியாக இருந்த வட்டி வருமானம், தற்போது ரூ.5,612 கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

வங்கியின் நிகர வட்டி வருமானம், கடந்த 2025 செப்டம்பர் காலாண்டில் ரூ.2,144 கோடியாக இருந்த நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் இது ரூ.2,820 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நிகர வட்டி வருமானம் 32 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

வங்கியின் சொத்து தரம் மேம்பட்டுள்ளது. கடந்த வருடம் 2.41 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், 2026 செப்டம்பர் வரையான காலாண்டில் இது 1.99 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வங்கியின் நிகர வாராக்கடன் அளவு 0.81 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 0.88 சதவீதமாக இருந்தது.

இருப்பினும், வங்கியின் மூலதனம் விகிதம் கடந்த செப்டம்பர் 2025 இறுதியில் 18.78 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 18.54 சதவீதமாகக் குறைந்துள்ளது.

summary

AU Small Finance Bank reported a 53 per cent surge in net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments