பாசனத்துக்கு தண்ணீர் கோரி உம்பளச்சேரி, அருந்தவம்புலத்தில் மறியல்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த உம்பளச்சேரி, அருந்தவம்புலம் ஆகிய இடங்களில் பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீர் கோரி விவசாயிகள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த உம்பளச்சேரி, அருந்தவம்புலம் ஆகிய இடங்களில் பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீர் கோரி விவசாயிகள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
உம்பளச்சேரி பாலம் அருகே அடப்பாறு வழியாக பாமணி மதகிலிருந்து தெற்கு மற்றும் வடக்கு ராஜன் வாய்க்காலில் போதிய அளவு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மறியல் நடைபெற்றது. வட்டாட்சியர் ப. குமார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கைக்கு உறுதியளித்ததால் மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
அருந்தவம்புலம்: கடைவீதியில்,ஆலத்தம்பாடி மதகு வழியே கோடியவிநாயகநல்லூர் வாய்க்காலுக்கு தண்ணீர் கோரி நடந்த மறியலுக்கு ஜி.கே. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். பொதுப் பணித் துறை தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளர் சம்பத், உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் சண்முகம் ஆகியோர் பேசி, ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் தண்ணீர் கிடைக்க உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.