FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை

நாகை மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

நாகை மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

நாகையை அடுத்த குற்றம்பொருத்தானிருப்பில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பகுதி நேர நியாயவிலைக் கடைக்கான புதிய கட்டடத்தை வியாழக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:

நாகை மாவட்டத்தில் கடந்த 2011-ஆண்டு முதல் தற்போது வரை 104 நியாயவிலைக் கடை கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், 64 கடைகள் முழு நேரக் கடைகள். மற்றவை பகுதி நேரம் இயங்கும் கடைகள்.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் மொத்தம் 585 முழு நேர நியாயவிலைக் கடைகளும், 137 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் உள்ளன. இதில், 49 கடைகள் சொந்தக் கட்டடங்களிலும், 467 கடைகள் அரசுக் கட்டடங்களிலும், 126 கடைகள் வாடகைக் கட்டடங்களிலும், 80 கடைகள் இலவசக் கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன.அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் அமைச்சர்.

ஆட்சியர் சு.பழனிசாமி தலைமை வகித்துப் பேசியது: கடந்த காலங்களில் நியாயவிலைக் கடையிலிருந்து 2 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 200-ஆக இருந்தால் மட்டுமே புதிய கடை திறக்க முடியும். தற்போது, 1.5 கி.மீ தொலைவுக்கு அப்பால் 150 குடும்ப அட்டைகள் இருந்தால், புதிய நியாயவிலைக் கடை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்படுகின்றன என்றார்.

கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் பி. கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப. காளீஸ்வரன், கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகிகள், அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments