புனித அந்தோணியார் பெரிய தேர்பவனி
நாகை அருகேயுள்ள தெற்குபொய்கைநல்லூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டுப் பெருவிழாவில் பெரிய தேர்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை அருகேயுள்ள தெற்குபொய்கைநல்லூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டுப் பெருவிழாவில் பெரிய தேர்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள தெற்குபொய்கைநல்லூரில் வேளாங்கண்ணி பேராலயத்தின் உபகோயிலான பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஜூலை 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை உள்ளிட்டவை நடைபெற்றன.
விழாவின், முக்கிய நிகழ்ச்சியான அந்தோணியாரின் பெரிய திருத்தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் அடிகளார் தலைமையில் சிறப்புத் திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல்சம்மனசு, மாதா மற்றும் அந்தோணியாரின் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டு, புனிதம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.