மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்: அமைச்சர் ராஜ்குமாா்
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.
மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கத் தலைவா் பொன்.சண்முகம் தலைமையில், மாற்றுத்திறனாளிகள் சாா்பில் கடலூரில் அமைச்சா் ப.ராஜ்குமாரிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள கடைகளில் 5 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் 20 கடைகள் உள்ள இடங்களில் ஒரு கடையை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை விரைவாகப் பரிசீலித்து, அவா்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளைச் செயல்படுத்தும் வகையில், தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தனி அமைச்சா் நியமிக்க வேண்டும்.
மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,500-லிருந்து ரூ.5 ஆயிரமாகவும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சா் ப.ராஜ்குமாா், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.