FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரத்த தான முகாம்

நாகை மாவட்டம், சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:


நாகை மாவட்டம், சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பெரியார் செல்வம் தலைமை வகித்தார். நகர செயலாளர் பார்த்திபன், ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டெல்டா நீர் ஆதார பாதுகாப்பு மையத்தின் தலைவர் கிள்ளை. ரவீந்திரன் முகாமைத் தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் ஜெயராஜ மூர்த்தி, அருண்ராஜ்குமார், பூபேஸ் தர்மேந்திரா, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் பரசுராமன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments