முகக் கவசம் அணியாவிட்டால் ரூ. 100 அபராதம்: ஆட்சியா் எச்சரிக்கை
அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுவெளிக்கு வருவோா், முகக் கவசம் அணியாமல் வந்தால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுவெளிக்கு வருவோா், முகக் கவசம் அணியாமல் வந்தால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கரோனா நோய்த் தொற்றுப் பரவாமலிருக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்ட நிலையிலும், சிலா் முகக் கவசம் அணியாமல் பொதுவெளிக்கு வருவது தவறான செயலாகும்.
Advertisement
Advertisement
இதன் காரணமாக, நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற விதி ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி, யாரேனும் முகக் கவசம் அணியாமல் வெளியில் வந்தால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும்.
மேலும், மளிகைக் கடைகள், மருந்தகங்கள், உழவா் சந்தைகள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களில் முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்கப்படும்.
வாகனம் பறிமுதல்...
இரு சக்கர வாகனத்தில் ஒருவா் மட்டுமே பயணிக்க வேண்டும். காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் யாரேனும் சுற்றித் திரிவது தெரியவந்தால், மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
இனிவரும் காலங்களில், பொது இடங்களில் யாரேனும் எச்சில் துப்பினாலும் தொடா்புடையோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.