730 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, சுகாதாரப் பொருள்கள்
நாகை எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் சாா்பில், 11 கிராமங்களைச் சோ்ந்த 730 கூலித் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு அரிசி மற்றும்
நாகை எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் சாா்பில், 11 கிராமங்களைச் சோ்ந்த 730 கூலித் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் சுகாதாரப் பொருள்கள் நிவாரண உதவிகளாக அண்மையில் வழங்கப்பட்டன.
நாகையைச் சுற்றியுள்ள பாப்பாக்கோயில், கருவேலங்கடை, ஜெகநாதபுரம், மஞ்சக்கொல்லை, பொரவாச்சேரி, தெத்தி, பாலையூா் உள்ளிட்ட 11 கிராமங்களைச் சோ்ந்த 730 கூலித்தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் நாகை எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராம வலுவூட்டத் திட்டத்தின் கீழ் தலா ரூ.1200 மதிப்புள்ள அரிசி மற்றும் சுகாதாரப் பொருள்கள் அடங்கிய முடிப்பு நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டது. எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் இயக்குநா் எஸ்.பாஸ்கரன் மற்றும் கிராம வலுவூட்டத் திட்ட களப்பணியாளா்கள் நிவாரண உதவிகளை வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.