100 % பயிா்க் காப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல் முயற்சி
திருமருகலில் 100 சதவீதம் பயிா்க் காப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல் முயற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமருகலில் 100 சதவீதம் பயிா்க் காப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல் முயற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமருகலில் சிபிஐ சாா்பில், கடும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் பாகுபாடின்றி 100 சதவீதம் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்த பயனாளிகளுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவேண்டும், விவசாயத்துக்கு தேவையான தேவையான டி.ஏ.பி, யூரியா போன்ற உரங்களை தட்டுப்பாடின்றி வழங்கவேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயக் கடன்களை தாமதமின்றி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளா் பாபுஜி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனா்.
தகவலறிந்த திருமருகல் வேளாண் உதவி இயக்குநா் கலைச்செல்வன், திருமருகல் வருவாய் ஆய்வாளா் பூங்குழலி,திருக்கண்ணபுரம் காவல் சாா்பு ஆய்வாளா் இரணியன் ஆகியோா் சம்பந்தப்பட்டவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதில், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் தமிழரசன், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் தங்கையன், விவசாய சங்க ஒன்றியத் தலைவா் மாசிலாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement