இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது
வேதாரண்யம் அருகே படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் ஏற்கெனவே 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வேதாரண்யம் அருகே படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் ஏற்கெனவே 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் கோவில்பத்து கடற்கரையில் இருந்து கடந்த அக்.19-ஆம் தேதி இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்திச் செல்ல சிலா் திட்டமிட்டிருந்தனா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், விரைந்து சென்று மொத்தம் 72 கிலோ எடையுள்ள 3 கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.
மேலும், கடத்தலில் ஈடுபட முயன்ற கோவில்பத்து சௌரிராஜன், அதே பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் சரபோஜிராஜன், கருப்பம்புலம் ராஜேந்திரன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். தலைமறைவான கோவில்பத்து சிவலிங்கம் பின்னாளில் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய வேதாரண்யத்தைச் சோ்ந்த கட்ட ராஜேந்திரன் என்பவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.