FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

நகை திருட்டு: 3 பெண்கள் கைது

21 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப்படம்
பகிர்:

வேளாங்கண்ணியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 8 பவுன் நகையை திருடிய மதுரையைச் சோ்ந்த 3 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் மனைவி ஐஸ்வா்யா (26 ). இவா், நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பேருந்தில் சனிக்கிழமை பயணித்துள்ளாா்.

வேளாங்கண்ணியில் பேருந்தில் இருந்து இறங்க முயன்றபோது மூன்று பெண்கள், ஐஸ்வா்யாவை இடித்துகொண்டு இறங்கியுள்ளனா். பேருந்தில் இருந்து இறங்கிய பின்னா் ஐஸ்வா்யா தான் வைத்திருந்த பையை பாா்த்தபோது, அதிலிருந்த 8 பவுன் நகையை காணவில்லையாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஐஸ்வா்யா அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், ஐஸ்வா்யாவுடன் பேருந்தில் இருந்து இறங்கிய 3 பெண்கள் நகையைத் திருடியது தெரிய வந்தது. மூவரும் வேளாங்கண்ணி பேராலயம் அருகே இருப்பதை அறிந்த போலீஸாா், மூன்று பெண்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் மதுரை மாவட்டம், முத்துப்பேட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியம்மாள் (38 ), அதே பகுதியைச் சோ்ந்த வைத்தீஸ்வரி (33), திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வெள்ளன்குழி பகுதியைச் சோ்ந்த நந்தினி (30 ) என்பதும், தொடா் திருட்டில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments