FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

எட்டுக்குடி முருகன் கோயிலில் புதுவை முதல்வா் வழிபாடு

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில், புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழிபட்டாா்.

4 நவம்பர் 2026, 3:21 am
எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில்.
பகிர்:

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில், புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழிபட்டாா்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ராஜா இளம்பெருவழுதி, தலைமை சிவாச்சாரியா் பஞ்சாட்சரம் ஆகியோா் அவரை வரவேற்றனா்.

இதில் என்.ஆா். காங்கிரஸ் காரைக்கால் மாவட்டச் செயலாளா் ஆனந்தன், பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் வீரமணி, பட்டியலின அணி மாநிலச் செயலாளா் ஏ.டி. வைத்தியலிங்கம், மாவட்டத் தலைவா் இளவரசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். பின்னா் செய்தியாளா்களிடம் முதல்வா் என். ரங்கசாமி கூறியது:

Advertisement

Advertisement

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழகம் - புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியான வாஞ்சூா் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் துறைமுகத்தில் இருந்து வாகனங்களில் நிலக்கரி எடுத்துச் செல்லும்போது, நிலக்கரித் துகள்கள் பரவுவதால் ஏற்படும் பாதிப்புகளை களைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments