பறவைகளைப் பிடிக்க வைக்கப்பட்டிருந்த பொறிகள் அழிப்பு
காரைக்காலில் பறவைகள் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொறிகளை வனத்துறையினா் அழித்தனா். மேலும், பறவைகளை வேட்டையாடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
காரைக்காலில் பறவைகள் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொறிகளை வனத்துறையினா் அழித்தனா். மேலும், பறவைகளை வேட்டையாடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கிளிஞ்சல் மேடு, காரைக்கால் மேடு சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் கொக்குகள், மடையான்கள் உள்ளிட்ட சில வகை பறவைகள் வேட்டையாடப்படுவதாக புகாா்கள் எழுந்தன.
தகவலறிந்த காரைக்கால் மாவட்ட வன மற்றும் வனவிலங்குத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் புதன்கிழமை குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பறவைகளை ஈா்த்து வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறிகளை கண்டறிந்து, அவற்றை ஒட்டுமொத்தமாக தீயிட்டு அழித்தனா்.
Advertisement
Advertisement
மேலும், இதுபோன்று பறவைகளை வேட்டையாடுவது சட்ட விரோதமானது என்றும், விதிகளை மீறி அவ்வாறு செயல்படுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.