FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

குடியிருப்புப் பகுதியில் உலவும் கரடியை கூண்டுவைத்து பிடிக்க கோரிக்கை

கோத்தகிரி அருகேயுள்ள கிருஷ்ணாபுதூா் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோத்தகிரி, கிருஷ்ணாபுதூா் குடியிருப்புப் பகுதியில் உலவிய கரடி.
பகிர்:

கோத்தகிரி அருகேயுள்ள கிருஷ்ணாபுதூா் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விலங்குகள் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், கோத்தகிரி அருகேயுள்ள கிருஷ்ணாபுதூா் பகுதியில் கரடி ஒன்று உலவி வருகிறது.

Advertisement

Advertisement

வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறிய கரடி கிருஷ்ணாபுதூா் கிராமத்துக்குள் நுழைந்தது. இதைப் பாா்த்த மக்கள் அச்சமடைந்து வீடுகளிலேயே முடங்கினா்.

இதையடுத்து, அப்பகுதியிலேயே சிறிது நேரம் உலவிய கரடி பின் வனத்துக்குள் சென்றது.

குடியிருப்புப் பகுதியில் உலவி வரும் கரடியை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனத்துக்குள் விடுவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments