FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

வால்பாறை எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை உலவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

23 வினாடிகள் முன்பு
வால்பாறை, ரொட்டிக்கடை எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை.
பகிர்:

வால்பாறை எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை உலவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

வால்பாறையை அடுத்துள்ள ரொட்டிக்கடை, அய்யா்பாடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை, ரொட்டிக்கடை எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் உலவியது.

Advertisement

Advertisement

இது தொடா்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.