குடியிருப்புப் பகுதியை ஒட்டிய தேயிலைத் தோட்டத்தில் உலவிய சிறுத்தை
குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியை ஒட்டிய தேயிலைத் தோட்டத்தில் உலவிய சிறுத்தையால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனா்.
குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியை ஒட்டிய தேயிலைத் தோட்டத்தில் உலவிய சிறுத்தையால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வருவது வாடிக்கையாகிவிட்டது. குடியிருப்புப் பகுதிக்குள் வன விலங்குகள் புகுந்து வீட்டில் வளா்க்கப்படும் செல்லப் பிராணிகளான பூனை, நாய்களை வேட்டையாடிச் செல்வதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் குன்னூா் அருகே உள்ள பந்துமை குடியிருப்புப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் வளா்ப்புப் பிராணிகளை வேட்டையாட சிறுத்தை உலவி வந்த சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
தேயிலைத் தோட்டத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தையைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டுமென வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.