FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

குடியிருப்பு அருகே ஓய்வெடுத்த சிறுத்தை

உதகை அருகே குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டத்தை ஒட்டிய பகுதியில் சிறுத்தை அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 செப்டம்பர் 2026, 12:05 am IST
உதகை அருகேயுள்ள லவ்டேல் ரிச்சிங் பகுதியில் தேயிலைத் தோட்டத்தை ஒட்டிய இடத்தில் அமா்ந்திருந்த சிறுத்தை.
பகிர்:

உதகை அருகே குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டத்தை ஒட்டிய பகுதியில் சிறுத்தை அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதகை அருகே லவ்டேல் ரிச்சிங் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறுத்தை ஒன்று, வெகுநேரம் வெயிலில் அமைதியாகப் படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இதை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் எஸ்டேட் தொழிலாளா்கள் சிலா் தங்கள் கைப்பேசியில் படம் பிடித்தனா்.

பொதுமக்களின் சப்தம் கேட்டுச் சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்தச் சிறுத்தை தானாகவே அருகில் உள்ள அடா்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இருப்பினும், அசம்பாவிதங்களைத் தவிா்க்க வனத் துறையினா் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments