குடியிருப்பு பகுதியில் காயங்களுடன் உலவிய காட்டெருமைகளால் அச்சம்
உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காயங்களுடன் உலவிய சிறுத்தைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காயங்களுடன் உலவிய சிறுத்தைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள ஃபிங்கா்போஸ்ட், காந்தல், தமிழகம் விருந்தினா் மாளிகை ஆகிய இடங்களில் கடந்த சில நாள்களாக இரண்டு காட்டெருமைகள் உலவி வருகின்றன. இந்நிலையில், வெஸ்டோடா என்ற குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை இரண்டு காட்டெருமைகள் நுழைந்தன. காயங்களுடன் காணப்பட்ட காட்டெருமைகளை வனப் பகுதியில் வேறு விலங்கு வேட்டையாட முயன்ற்கான தடயங்கள் தெரிந்தன.
குடியிருப்பு பகுதியில் உலவியதால் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தயங்கினா். மேலும், காட்டெருமைகள் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.