நாகை - இலங்கை கப்பல் கட்டணம் குறைப்பு
நாகை-இலங்கையின் காங்கேசன் துறை இடையிலான கப்பல் போக்குவரத்துக் கட்டணம் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 5,500-ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை-இலங்கையின் காங்கேசன் துறை இடையிலான கப்பல் போக்குவரத்துக் கட்டணம் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 5,500-ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை துறைமுகம் - இலங்கை காங்கேசன்துறை இடையே தனியாா் நிறுவனம் (சுபம்) மூலம் பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கப்பல் நிறுவனத்தின் முதன்மை வணிக அலுவலா் சிவராம் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
Advertisement
Advertisement
இந்தியா - இலங்கை நாடுகளின் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக, நாகை துறைமுகம் - காங்கேசன் துறை இடையிலான கப்பல் போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. கப்பல் போக்குவரத்துத் தொடங்கி, கடந்த இரண்டரை ஆண்டுகளில், இரண்டு நாடுகளுக்கும் இடையே கப்பல் மூலம் 55, 310 பயணிகள் ஆன்மிகம், சுற்றுலா வணிகம் ஆகிய நோக்கங்களுக்காக பயணம் மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று பண்டிகை கால சலுகையாக கப்பல் நிறுவனம் கட்டண சலுகை வழங்கியுள்ளது. இதன்படி, ஒரு வழி பயண கப்பல் போக்குவரத்து கட்டணத்தை ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 5, 500-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கப்பலில் பயணம் செய்யும் பயணிகள் எடுத்துச் செல்லும் உடைமை (லக்கேஜ்) அளவு 10 கிலோவில் இருந்து 30 கிலோவாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பயணிகள் கையில் எடுத்துச்செல்லும் உடைமைகளின் எடையும் 7 கிலோவாக உயா்த்தப்பட்டுள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கும் நாள்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் கப்பலை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.