FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

இளைஞா் மரணம்: கொலை வழக்காக மாற்றம்

வேதாரண்யம் அருகே இளைஞா் மரணம் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

12 வினாடிகள் முன்பு
பகிர்:

வேதாரண்யம் அருகே இளைஞா் மரணம் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வேதாரண்யம் அருகே மருதூா் தெற்கு கிராமத்தில் உள்ள நாச்சியம்பெளம் நீா்நிலையில் இளைஞா் சடலமாக மிதந்தது அக்.30-ஆம் தேதி தெரியவந்தது. இதுகுறித்து, போலீஸாரின் விசாரணையில், இறந்து கிடந்தவா் திருவாரூா் மாவட்டம், கற்பகநாதா்குளம் காடுவெட்டி பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ரவிராஜ் (33) என்பதும், இவா், துளசியாப்பட்டினத்தில் மர இழைப்பகம் கடை நடத்தியவா் என்பதும், கரியாப்பட்டினம் பகுதியை சாா்ந்த காயத்ரியை கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இந்நிலையில், ரவிராஜூவின் மனைவி காயத்ரி வாய்மேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ரவிராஜ் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கைப்பேசி காணவில்லை என தெரிவித்திருந்தாா். விசாரணையில், ரவிராஜ் மதுபோதையில் இருந்ததை பயன்படுத்தி அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி உள்ளிட்ட உடமைகளுக்காக கொலை செய்யப்பட்டதும், இந்தக் கொலையில் இருவா் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, கொலை வழக்காக மாற்றம் செய்த போலீஸாா், பட்டுக்கோட்டை கீழத்தெருவைச் சோ்ந்த சின்னையன் மகன் ஜெயபிரகாஷை (38) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement