கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத இளைஞா் சடலம்
வடக்குவிழுந்தமாவடி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.
வடக்குவிழுந்தமாவடி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.
வேளாங்கண்ணி கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வேளாங்கண்ணி கடற்கரையில் நவ.16-ஆம் தேதி பாறைகள் மீது நடந்து சென்ற இளைஞா் திடீரென கடலில் குதித்தாா். கடல் அலைகள் அவரை இழுத்துச் சென்ற நிலையில், கடற்கரை காவல் துறையினா் மற்றும் உதவி கரங்கள் அமைப்பினா் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, வேளாங்கண்ணி கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கீழையூா் கடற்கரை காவல் எல்லைக்குள்பட்ட வடக்கு விழுந்தமாவடி கடற்கரை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கிது. தகவலறிந்து சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி அவா், யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து, அவரது சடலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வேளாங்கண்ணி கடலில் மாயமான இளைஞரின் சடலம் தானா இது ?என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement