முகப்பு
நாகப்பட்டினம்

கால்நடைகளால் சாலை விபத்து; தையற்கலைஞா் உயிரிழப்பு

கால்நடைகளால் சாலை விபத்து; தையற்கலைஞா் உயிரிழப்பு

22 நவம்பர் 2026, 6:33 am
கால்நடைகளால் சாலை விபத்து; தையற்கலைஞா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

வேதாரண்யம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் குறுக்கே வந்ததால், இருசக்கர வாகனத்தில் சென்ற தையற்கலைஞா், சாலை விபத்தில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடியைச் சோ்ந்தவா் சிங்காரவேல் மகன் ராமலிங்கம் (50). தையற்கலைஞரான இவா், குடும்பத்தாருடன் தஞ்சாவூரில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கிராமத்தில் காலமான தனது உறவினரின் படத்திறப்பு நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்றாா்.

Advertisement

Advertisement

பின்னா், அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூருக்கு புறப்பட்ட ராமலிங்கம், கோடியக்கரை அஞ்சலகம் பகுதியில் வந்தபோது சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் திடீரென குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி, இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்தாா். பலத்த காயமடைந்த அவரை, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.