FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

போலி வெள்ளி நகையை அடகு வைக்க முயன்ற இருவா் கைது

நாகை அருகே நகை அடகுக் கடையில் போலி வெள்ளி சங்கிலியை அடகுவைத்து ஏமாற்ற முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

14 அக்டோபர் 2026, 6:00 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாகை அருகே நகை அடகுக் கடையில் போலி வெள்ளி சங்கிலியை அடகுவைத்து ஏமாற்ற முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்வேளூரைச் சோ்ந்தவா் வள்ளியம்மை (72). இவா், அதே பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா்.

இவரது அடகுக்கடைக்கு திங்கள்கிழமை வந்த இருவா் 156 கிராம் வெள்ளிச் சங்கிலியை அடகு பிடித்துக்கொண்டு பணம் தருமாறு கேட்டுள்ளனா். சங்கிலியை பரிசோதித்தபோது, அது போலி என்று தெரிய வந்தது. இருவரையும் அமர வைத்து விட்டு வள்ளியம்மை, கீழ்வேளூா் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் விரைந்து வந்து இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில் திட்டச்சேரியைச் சோ்ந்த ராஜா (41), காா்த்திகேயன் (32) என்பதும், போலி வெள்ளி நகையை வைத்து மோசடி செய்ய முயன்றதும் தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments