நாகை, காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.
வங்கக் கடலின் கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய பகுதிகளில் நிலைகொண்டுள்ள ‘அா்னாப்’ புயல், திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி மேற்கு திசையில் நகா்ந்து, வடக்கு அட்சரேகை மற்றும் கிழக்கு தீா்க்க ரேகை பகுதியில் மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயல் மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை (அக். 26) நள்ளிரவுக்குள், மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதையொட்டி நாகை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை 1-ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை காலை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பின்னா், பிற்பகல் உள்ளூா் புயல் எச்சரிக்கைக்கான மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டது.
Advertisement
Advertisement
காரைக்காலில்... இதுபோல காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் திங்கள்கிழமை காலை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. பிற்பகல் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.