FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருவாரூர் மாவட்டத்தில் அக். 2-ல் கிராமசபைக் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜயந்தியையொட்டி, கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

திருவாரூர் மாவட்டத்தில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜயந்தியையொட்டி, கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கூட்டத்தில், 2015-16-ம் ஆண்டுக்கான 14-வது நிதி ஆணைய மானியத்திலிருந்து பணிகள் தேர்வு செய்தல், ஊராட்சிகளில் தணிக்கை அறிக்கை, ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள், ஊரகப் பகுதிகளில் குடிநீர் விநியோகம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு மற்றும் இதரச் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கிராமப் புறங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தல்.

Advertisement

Advertisement

ஊராட்சிப் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கண்காணித்தல், சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேர்ந்தெடுக்கப்பட்ட 40 ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்துதல், மகளிர் திட்டம், புதுவாழ்வுத் திட்டத்தின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2015, மாதங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கால்நடைகளை தாக்கும் கால் நோய் மற்றும் கோமாரி நோய் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இதர பொருட்கள் ஊராட்சித் தலைவரால் அல்லது ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதி பெற்று உறுப்பினர்களால் கொண்டு வரப்படும் இதர பொருட்கள் குறித்து பொதுமக்களின் பாவைக்கு வைக்கப்படும். எனவே, கிராம மக்கள் இதில் பங்கேற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments