FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெருகவாழ்ந்தானில் விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாவிரதம்

மன்னார்குடியை அடுத்துள்ள பெருகவாழ்ந்தானில் சனிக்கிழமை கோட்டூர் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

மன்னார்குடியை அடுத்துள்ள பெருகவாழ்ந்தானில் சனிக்கிழமை கோட்டூர் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு உயர் பாதுகாப்பு வழங்க வேண்டும், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சவை போர் குற்றவாளி என அறிவித்து, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் குறித்து ஐ.நா. மூலம் சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். கோட்டூர் ஒன்றியத்தில் விவசாயப் பணிக்கு முறைவைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேருந்துநிறுத்தம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் முருகையன் தலைமை வகித்தார்.

மாவட்ட பொருளாளர் வ. பார்வேந்தன், மாவட்ட துணைச் செயலர் முல்லைவளவன், ஒன்றிய பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

Advertisement

கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலர் என்.டி. இடிமுரசு, மாநில துணை பொதுச் செயலர் திருமார்பன், மாவட்ட அமைப்புச் செயலர் செல்வம் ஆகியோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments