FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

திருத்துறைப்பூண்டி குறுவட்ட கபடி போட்டிகள், முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

திருத்துறைப்பூண்டி குறுவட்ட கபடி போட்டிகள், முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் 14 வயதுக்குள்பட்ட கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. இப்பிரிவில் மொத்தம் 18 பள்ளிகள் பங்குபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களை வியாழக்கிழமை தலைமையாசிரியர் மு.ச. பாலு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.இ.ஏ.ஆர். அப்துல் முனாப், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இரா.மா. தமிழ்ஜோதி, பொருளாளர் வி. பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் செ. ஆனந்தகுமார், என். நேதாஜி இருவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments