குரு பகவான் கோயிலில் பொது விருந்து
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் புதன்கிழமை
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் புதன்கிழமை சுதந்திர தின விழாவையொட்டி, சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
இதையொட்டி, அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் குரு பகவானுக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.