பெண்ணைத் தாக்கியவர் கைது
முத்துப்பேட்டை அருகே பெண்ணைத் தாக்கியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
முத்துப்பேட்டை அருகே பெண்ணைத் தாக்கியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
முத்துப்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குளம் தச்சர் தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி கமலா(38). இவர் அதே பகுதியில் உள்ள சித்தேரி குளத்தில் மணல் எடுத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்குவந்த அதே ஊரை சேர்ந்த ஜகபர்அலி (35) நான் குளத்தை குத்தகைக்கு எடுத்து உள்ளேன், மணல் எடுக்கக் கூடாது என தடுத்து கமலாவிடம் தகராறு செய்து, கமலாவை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த கமலா திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து ஜகபர்அலியை கைது செய்து திருத்துறைப்பூண்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.