FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கிராம உதவியாளர் சங்கம் முடிவு

கிராம உதவியாளர்களுக்கு எதிரான கோரிக்கைகளை கைவிடாவிட்டால், கிராம நிர்வாக அலுவலர்களைக்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

கிராம உதவியாளர்களுக்கு எதிரான கோரிக்கைகளை கைவிடாவிட்டால், கிராம நிர்வாக அலுவலர்களைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வன் நீடாமங்கலத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளில், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு பட்டப்படிப்பை கல்வித் தகுதியாக்க வேண்டும் மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவாய் கிராம உதவியாளர்களைப் பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்கிற இரண்டு கோரிக்கைகள் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு எதிராக உள்ளன.
இவர்களின் கோரிக்கை, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில், கிராம உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு மூலம் 20 சதவீதம் வழங்கப்படும் என மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண்-570 ஐ நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்  பணியிடம் புதிதாக ஏற்படுத்தும்போது, அந்த பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி என்று இருந்தால் போதுமானது  என மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். நிர்ணயம் செய்திருந்தார். இதற்கு காரணம், இந்த பணிக்கு ஆதிதிராவிடர்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வரவேண்டும் என்பதற்காகத்தான்.
 எனவே, கல்வித் தகுதியை மாற்றினால் எம்.ஜி.ஆரின் கனவு தகர்ந்து விடும்.
மேலும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் வருவாய் கிராம உதவியாளர்களை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாறுதல் வழங்கிட கேட்டுள்ளதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த 2 கோரிக்கைளையும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக டிச. 29-ஆம் தேதி மதுரையில்  நடைபெறும் வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments